உள்ளூர் செய்திகள்

மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை

மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். மீனவர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் அறிவிக்காமல் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மண்டபம் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமான கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது வாகன விபத்தில் சிக்கி 4 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பலியான மீனவர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் அறிவிக்காமல் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பலியானவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்ச நிவாரணத்தையும் உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும் கடல் அட்டை மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.