உள்ளூர் செய்திகள்

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் த.மு.மு.க, ம.ம.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. த.மு.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். இதில் ஹூசைன் ஆலிம் சிறப்புரையாற்றினார். அவைத்தலைவர் சைபுதீன், ராமநாதபுரம் நகரசபைத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முகமது அலி ஜின்னா, த.மு.மு.க மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகீம், செயலாளர் அப்துல் ரஹீம், நகர செயலாளர் முகமது தமீம், நகர் தலைவர் முகமது அமீன், மாவட்ட செயலாளர் முகமது ஆசிக் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT