மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சைக்கிள் வழங்கிய போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கமுதியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கமுதியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி கோட்டாட்சியர் அப்துல் ரத்தாப் முன்னிலையில் நடைபெற்றது.

மாலை மலர்

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி கோட்டாட்சியர் அப்துல் ரத்தாப் முன்னிலையில் நடைபெற்றது.

கமுதி தாசில்தார் சேதுராமன் வரவேற்றார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி னார்.

விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றிய பெரும் தலைவர் தமிழ்செல்வி போஸ், எம்.பி. நவாஸ் கனி, மாவீரன் வேலுசாமி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் வாசு தேவன், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, கோவிந்தராஜ், மணலூர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.