திருமண விழாவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டபோது எடுத்த படம். அருகில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளனர். 
உள்ளூர் செய்திகள்

முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் இல்ல திருமண விழா

முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் இல்ல திருமண விழாவை டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்-லெட்சுமி ஆகியோரின் மகள் டாக்டர் மு.நிவேதிதாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வேல் மகாராஜன்-சுந்தரி ஆகியோரின் மகன் டாக்டர் வே.முருகனுக்கும் மதுரை கருப்பாயூரணி எம்.பி. மகாலில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்

டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்து பேசும்போது, முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. பதினெட்டாம்ப டியான் குடும்பத்தினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசிகள். அவர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர். இந்த திருமணத்தை நடத்தி வைத்த தில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன் என்றார்.

பின்னர் அவர் அ.ம.மு.க. பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

திருமண விழாவில் முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் ராமையா தேவர். வக்கீல்புலிகேசி மாவட்ட மருத்துவ அணி செயலாளர்டாக்டர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கடலாடி வெள்ளத்துரை, கமுதி வி.கே.ஜி. முத்துராமலிங்கம், புளியங்குடி முத்துராம லிங்கம், செல்வநாயகபுரம் முருகன், வெங்கலகுறிச்சி சேதுபதி, முதுகுளத்தூர் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT