போதை மாத்திரை விற்றவர் கைது. 
உள்ளூர் செய்திகள்

போதை மாத்திரை விற்றவர் கைது

முதுகுளத்தூரில் போதை மாத்திரை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா மேலகன்னிசேரி கிராமத்தை சேர்ந்த வெள்ளைத்துரை மகன் இட்லி முத்து (வயது 38). இவர் முதுகுளத்தூர் சரவண பொய்கை ஊரணி நடைபாதையில் போதை மாத்திரை பவுடர் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. 

முதுகுளத்தூர் இன்ஸ் பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் சரவண பொய்கை ஊணி யில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இட்லிமுத்து போதைமாத்திரை பவுடர்களை வீசிவிட்டு தப்பிஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்து 1 கிலோ போதைபவுடருடன் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT