உள்ளூர் செய்திகள்

ஆடி பெருக்கு: பூக்குழி இறங்கிய பக்தர்கள்

பரமக்குடி அருகே சதுரங்க நாயகி அம்மன் கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேலப்பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் சதுரங்க நாயகி அம்மன் சந்தன கருப்பு சாமிகள் கோவில் உள்ளது. இங்கு 20-ம் ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருமணம் வரம் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும், நேர்த்திக்கடனாகவும் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேலப்பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT