பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

போதிய பஸ் வசதி இல்லாமல் படிக்கட்டில் பயணம்

ராமநாதபுரத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பயணிகள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பள்ளி, கல்லு£ரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து அலுவலகங்களும் செயல்படுகின்றன. 

இதன் காரணமாக பள்ளி, கல்லு£ரி, அலுவலகம் செயல்படும், முடியும் நேரங்களில் பஸ் நிலையத்தில் பயணிகள் குவிகின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இல்லாததால் கொரோனா விதிமுறை பின்பற்றாமல் பஸ்சில் போட்டி போட்டு பயணிகள் ஏறுகின்றனர். 

முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளனர். குறிப்பாக ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை, பெரியபட்டினம், வாலாந்தரவை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  ஏராள மானோர் ராமநாதபுரத்தில் படித்து வருகின்றனர். 

காலை 8 முதல் 9 மணி வரையிலும் மாலை 4 முதல் 6 மணி வரை பள்ளி நேரங்களில் போதுமான அளவிற்கு பஸ் இல்லாததால் மாணவ&மாணவிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.  மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லும் நிலை உள்ளது. 

எனவே கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும். கிராமங்களுக்கு குறைந்தஅளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் நின்று பயணம் செல்கின்றனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.