உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

கீழக்கரையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காலை உணவு விரிவாக்க திட்டம் புதிய கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. நகர் மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா திட்டத்தை தொடங்கி வைத்தார். மறவர் தெரு, முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு விரிவாக்க திட்டத்தை செஹானஸ் ஆபிதா தொடங்கி வைத்தார்.

நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் பாதுஷா, சக்கினா பேகம், காயத்ரி, ஜெயலெட்சுமி, சூர்ய கலா, சித்திக், பைரோஸ் பாத்திமா, சேக் உசேன், பவித்ரா, கீழக்கரை நகர் தி.மு.க செயலாளர் பஷீர் அகமது, துணை செயலாளர் ஜெய்னுதீன், பொருளாளர் சித்திக், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, பொறியாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT