உள்ளூர் செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம்

நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

கீழக்கரை

ராமநாதபுரம் தாய் பாசம் அறக்கட்டளை, கல்வித்தந்தை மருத்துவர் இ.எம்.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்தான முகாம் மற்றும் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டா ளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி விஜயா தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஷேக் இபுராஹிம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்றம் பரணிதரன், மாவட்ட அமர்வு நீதிபதி விரைவு மகளிர் நீதிமன்றம் கோபிநாத், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் சமது ஒருங்கிணைத்தார். மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT