ராமநாதபுரம்
புனித ஆன்மிக தலமான ராமேசுவரத்துக்கு ராமநாதபுரம் வழியாக தினந்தோறும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர மதுரை, சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் திருப்பதி, வாரணாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ராமநாதபுரம் ரெயில் நிலையத்துக்கு தினந்தோறும் நு£ற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவர்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ‘பேட்டரி கார்’ வாங்கப்பட்டது. ஆனால் இந்த கார் கடந்த 2 ஆண்டாக பயன்பாடு இல்லாமல் பிளாட்பாரத்தில் அப்படியே காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது.
பிளாட்பாரத்தில் இருந்து வெளியே செல்ல மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக பேட்டரி காரை செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.