உள்ளூர் செய்திகள்

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். துணை முதல்வர் லினிமோல், அபாகஸ் பயிற்சி ஆசிரியர் உமர் சரிப் ஆகியோர் பாராட்டினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் தொடக்க பள்ளியில் மாவட்ட அளவி லான அபாகஸ் போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவில் 21 பள்ளிகளில் இருந்து 787 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் படிக்கும் 9 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 4 மாணவர்கள் சாம்பியன் பட்டமும், மற்ற மாணவர்கள் முதல் 3 இடங்களிலும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்றாகீம், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், துணை முதல்வர் லினிமோல், அபாகஸ் பயிற்சி ஆசிரியர் உமர் சரிப் ஆகியோர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT