குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். 
உள்ளூர் செய்திகள்

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை

குத்துச்சண்டை போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

கீழக்கரை

ராமநாதபுரத்தில் 20 பள்ளிகளை சேர்ந்த 180 மாண வர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 7-ம் வகுப்பு மாணவன் அனீக் ரசீத், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி யில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் செய்யது அப்துல் ஹசன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் முகமது ஜாசிர் ஆகியோர் மாவட்ட அளவி லான போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் பயிற்சி யாளர் ரபீக் உசேன் ராஜா ஆகியோரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி தலைமை ஆசிரி யர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT