உள்ளூர் செய்திகள்

1008 திருவிளக்கு பூஜை

தொண்டி அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற்றியூரில் உலக அமைதிக்காகவும், கொரோனா வைரஸ் முற்றிலும் அழிய வேண்டியும், இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நிறுவன தலைவர் இளையராஜா தலைமையில் நடந்தது.

சாராதா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுந்தரி விளக்கு பூஜையை தொடங்கிவைத்தார். கல்லூரி மாணவிகள் மந்திரங்கள் ஓதினர்.பா.ஜ.க.மாவட்ட தலைவர் கதிரவன், மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், துரைப்பாண்டி, இந்து ஜனநாயகப் பேரவை நிறுவன தலைவர் அண்ணாத்துரை, மணிகண்ட குருக்கள், முன்னிலை வகித்தனர்.

பாகம்பிரியாள் அம்மன் கோவில் முன்பு நடந்த இந்த திருவிளக்கு வழிபாட்டில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT