வாக்களிக்க ஏற்பாடு 
உள்ளூர் செய்திகள்

காய்ச்சல் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு

காய்ச்சல் பாதித்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் தடுப்பு கவச உடையணிந்து வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளை சேர்ந்த மொத்தம் 205 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19ந்தேதி நடைபெறுகிறது. 

வாக்களிக்கும்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள் ளப்படவேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து ராம நாதபுரம் மாவட்டத் தில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 13 கொரோனா பரவல் தடுப்புக்கான பொருள்கள் வழங்கப்படுகிறது. வெப்பமானி, கிருமி நாசினி, கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் குப்பைகளை போடும் வகையில் 70 லிட்டர் அளவு கொண்ட பிளாஸ்டிக் கூடைகள், அதில் குப்பைகளை சேகரிக்க அரசு அனுமதித்த மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படுகின்றன.

வாக்களிக்க வருவோ ருக்கு காய்ச்சல் கண்ட றியப்பட்டால், அவர்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு உடை வழங்கப்பட்டு, அதன்மூலம் மாலையில் அவர்களுக்கான நேரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 12 உடைகள் தயார் நிலையில் இருக்கும் எனவும் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்தார்.