வாலிபர் கைது 
உள்ளூர் செய்திகள்

காரை கடத்திய வாலிபர் கைது

கீழக்கரையில் காரை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள கும்பிடு மதுரையை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 38).  நேற்று முன்தினம் மாலையில் இவர் கீழக்கரை சர்வீஸ் ஸ்டேசன் ரோட்டில் தனது  காரை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 

மறுநாள் காலையில் கார் ரோட்டின் அருகே சுமார் அரை கி.மீ தூரத்தில் கருவேலமரத்துக்கு இடையே  நிற்பதாக தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அப்துல் வகாப் நண்பரை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு கார் நின்றிருந்தது. காரில் கீழக்கரையில் சிமெண்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் (21) பதுங்கி இருந்தார். 

அவரை பிடித்து விசாரித்தபோது காரை திருடிக்கொண்டு பீகார் தப்பிச் செல்ல முடிவு செய்ததாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வடநாட்டு வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.