என்.எஸ்.எஸ். மாணவர்களுடன் ராஜா எம்.எல்.ஏ. உள்ளதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் மனோ கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து

முகாமில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகள் செய்த சேவைகள் குறித்து பாராட்டி பேசினார். தி.மு.க. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக வென்றிலிங்கபுரம், தட்டான்குளம், ஈச்சந்தா ஆகிய கிராமங்களில் 7-நாள் சிறப்பு முகாம் நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகள் செய்த சேவைகள் குறித்து பாராட்டி பேசினார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் அப்துல் காதிர், மாணவ-மாணவிகள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து பேசினார்.

இதில் தி.மு.க. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் குமாரி செல்வி, மேனகா, பேராசிரியர் கணபதி, வென்றிலிங்கபுரம் ஊராட்சி தலைவி சுமதி, தொழிலதிபர் கனகவேல் மற்றும் பெஞ்சமின் நிர்மல் முத்துக்குமார், கணேசன் உள்ளிட்ட பேராசிரியர்களும், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT