விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

சின்னமனூரில் மழைநீர்சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

மழைநீர் சேமிப்போம் விழிப்புணர்வு பேரணி முத்தாலம்மன் கோவிலில் முன்பு தொடங்கி அரசு சுகாதார நிலையம் வழியாகச் சென்று தேரடியில் நிறைவு பெற்றது. பள்ளி சங்கமாணவர்கள் சாரணபடை மாணவர்கள் மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 510 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சின்னமனூர்:

சின்னமனூரில் உத்தமபாளையம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்போம் விழிப்புணர்வு பேரணி முத்தாலம்மன் கோவிலில் முன்பு தொடங்கி அரசு சுகாதார நிலையம் வழியாகச் சென்று தேரடியில் நிறைவு பெற்றது.

இதில் சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி சேர்மன் என்ஜினியர் முகமது சுல்தான் தலைமையில், தாளாளர் முகமது அபுபக்கர் சித்திக் முன்னிலையில் பள்ளி முதல்வர் முகமது ஷாலி, பள்ளி சங்கமாணவர்கள் சாரணபடை மாணவர்கள் மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 510 மாணவர்கள் கலந்து கொண்டனர்.