கொட்டங்காடு கோவிலில் அம்மன் அலங்காரத்தில் இருந்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

உடன்குடி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா

பத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.வருகிற 22-ந் தேதி இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும்.

உடன்குடி:

உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் திருநாளான 17-ந் தேதி இரவு 9 மணிக்கு அலங்கரி க்கப்பட்ட பூஞ்சைபுரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வந்தார். இரவு அன்னதானம் நடந்தது.

வருகிற 22-ந் தேதி இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். 23ந் தேதி இரவு 12 மணிக்கு சிறப்பு ஆலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன், பவளமுத்து விநாயகர் முக்கிய வீதியுலா நடை பெறும்.ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்ம கர்த்தா சுந்தர ஈசன் மற்றும் விழாக்குழுவினர் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT