புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாரியம்மன் கோவில் ெதருவில் தளபதி விஜய் நூலகத்தை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், நகர் மன்ற உறுப்பினருமான ஜெ.பர்வேஸ் குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே விலையில்லா உணவகம், மாணவ, மாணவிகள் பயில பயிலகம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பயிலகம் அருகிலேயே விஜய் நூலகத்தை டாக்டர் ஜெ.பர்வேஸ் திறந்து வைத்தார். அப்பகுதி மக்கள் இந்நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
விஜய் ரசிகர்களை மாவட்ட தலைவர் ஜெ.பர்வேஸ் இதுபோன்ற செயல்களால் ஒருங்கிணைக்கிறார். ஏற்கனவே விஜய் அரசியல் பிரவேசம் செய்ய எண்ணியுள்ள நிலையில் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் அதை நோக்கி செல்கிறது. எப்படி இருந்தாலும் யார் இருந்தாலும் மக்களுக்கு நன்மை கிடைத்தால் பரவாயில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் .