உள்ளூர் செய்திகள்

காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா

25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டனகாவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அறிவுறுத்தலின் பேரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காவல் ஆய்வாளர் உஷா நந்தினி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மா, பலா, கொய்யா, சந்தனம் மற்றும் 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் கூண்டுகள் அமைத்து தண்ணீர் ஊற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அனைத்து போலீசார் உட்பட அருகில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT