உள்ளூர் செய்திகள்

கொலை குற்றவாளி மீது குண்டர் சட்டம்

மனைவியை கொலை செய்தவர் கலெக்டர் பரிந்துரை பேரில் நடவடிக்கை

மாலை மலர்

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வெண்ணாவல்குடி கொத்தோட்டையன் குடியிருப்பில் உள்ள பாண்டியராஜன் (வயது 19) என்பவர், கறம்பக்குடி ஒன்றியம் தெற்கு பல்லவராயன் பத்தை கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற நித்தியாவை (வயது 35) கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் மீது உள்ள பல்வேறு வழக்குகளின் காரணமாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. வந்திதா பாண்டே பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அவர்களின் உத்தரவின் படி குண்டர் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.