உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி மாணவன் முதல் இடம்

ஆலங்குடி மாணவன் முதல் இடம் பிடித்துள்ளார் மாநில அளவில் கலை பண்பாட்டு போட்டி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பானவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் முருகானந்தம். இவர் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலை பண்பாட்டு கலாச்சார திருவிழா போட்டியில் முருகானந்தம் பங்கேற்று முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். மாணவனை ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவிகள் மற்றும் கிராமத்து மக்கள் பாராட்டினர்.