ஆலங்குடி:
ஆலங்குடி அருகே செம்பட்டி விடுதி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றுக்கொண்டிருந்த கறம்பக்குடி திருமணஞ்சேரி பட்டத்திக்காட்டை சேர்ந்த செல்லையா மகன் முத்துசாமி (வயது 30) மற்றும் செம்பட்டிவிடுதி கந்தசாமி மகன் சங்கர் (34)ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஆலங்குடி மதுவிலக்கு காவல் நிலைய த்திற்கு அழைத்து வந்தனர் .பின்னர் இருவர் மீது ஆலங்குடி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் புக ழேந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.