அதிகாரிகள் ஆய்வு 
உள்ளூர் செய்திகள்

ராமஞ்சேரியில் புதிய நீர்த்தேக்கம் கட்ட திட்டம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.7ஆயிரத்து 814 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் சீரமைப்பு மற்றும் புதிய நீர்த்தேக்கம் குறித்து அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் 4,133 இடங்கள் கண்டறியப்பட்டு உரிய நேரத்தில் தூர்வாருதல், வடிகால் அமைப்புகளை கட்டமைத்தல், தடுப்பு சுவர்களை கட்டுதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்பு செயல்பாடுகள் விரைவு படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலராக பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.திருப்புகழ் தலைமையில் சென்னை பெருநகர மேலாண்மைக்குழு அமைக் கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.7ஆயிரத்து 814 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் சீரமைப்பு மற்றும் புதிய நீர்த்தேக்கம் குறித்து அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளது.

இதில் திருவள்ளூர் மாவட் டத்தில் கொசஸ்தலை, கூவம், நந்தியாறு, நகரியாறு ஆகிய ஆறுகள் செல்லும் வடிநிலப்பகுதிகளான நீர் வழிப்பாதைகள், ஏரிகள், அணைகட்டுகள் போன்ற வைகளை சீரமைக்க பொதுப்பணித் துறையினருக்கு அனுப்பி யுள்ளனர்.

கொசஸ்தலை ஆற்றில் நீர்நிலைகளை தூர் வாரி கொள்ளளவை அதிகப் படுத்துதல், அணைக் கட்டுகளை சீரமைத்தல், நீர் வழிப்பாதைகளை சீரமைத்தல், பூண்டி நீர்த்தேக்கம் அருகே உள்ள ராமஞ்சேரி பகுதியில் ஒரு டி.எம்.சி நீரைத் தேக்கிவைக்க புதிய நீர்த்தேக்கம் அமைத்தல் என மொத்தம் 138 பணிகளுக்கு ரூ.3ஆயிரத்து 191.25 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் கூவம் ஆற்றில் 85 பணிகளுக்கு ரூ.1,174.25 கோடி, நந்தியாற்றில் 69 பணிகளுக்கு ரூ.1,260 கோடி, நகரியாற்றில் 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் உட்பட 75 பணிகளுக்கு ரூ.2,169 கோடி என மொத்தம் ரூ.7,814.50 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தயாரித்து மேலாண்மைக்குழு மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள் ளது.

இதற்கான உத்தரவு மற்றும் நிதி ஒதுக்கீடு வந்தவுடன் பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு மற்றும் பொதுப்பணித்துறையினர் ராமஞ்சேரி பகுதியில் புதிய நீர்த்தேக்கம் அமையும் இடத்தை ஆய்வு செய்தனர்.

அரசின் ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த புதிய நீர்த்தேக்கம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.