உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துமாறு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

அன்னதானப்பட்டி:

தமிழகத்தில் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துமாறு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்லப்பாண்டியன், கென்னடி தலைமை தாங்கினர்‌ . இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தையல்நாயகி, ‌சண்முகம், ராஜேந்திரன், சின்னசாமி, இளமுருகன் ஆகியோர் தனித்தனியே புகார் மனுக்கள் பெற்று விசாரித்தனர்.

24 புகார் மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. இது போல மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.