உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் பன்றி பிடிக்கும் வாகனம் சிறைபிடிப்பு

மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். பன்றி வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவித்து பன்றி பிடிக்க வந்த வாகனத்தை சிறைபிடித்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். இதற்காக பன்றிகளை பிடிக்க வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து பிடித்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பன்றி வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவித்து பன்றி பிடிக்க வந்த வாகனத்தை சிறைபிடித்தனர்.

மேலும் அந்த வாகனத்தின் சாவியை பறித்து பேரூராட்சியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது பிடிக்கப்படும் பன்றியை தொலைதூரத்தில் விடாமல் விற்றுவிடுவதாக குற்றம்சாட்டினர்.