கோவை
கோவை மாவட்டம் காரமடை குந்தா காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்துவது போல இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்த பெண் புரோக்கர் பரிமளா (வயது 36) என்பவரை கைது செய்தனர். அங்குள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 28, 33 ,24 வயதுடைய 3 அழகிகளை போலீசார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் பரிமளாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 அழகிகளையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.