பிரிண்டர் வழங்கிய போது எடுத்த படம் 
உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பள்ளிக்கு பிரிண்டர்கள்

பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பிரிண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது.ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஆலடி எழில்வாணன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு பிரிண்டர்கள் வழங்கினார்.

தென்காசி:

பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பிரிண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், மாவட்ட கண்தான ஒருங்கிணைப்பாளருமாகிய இளங்கோ தலைமை தாங்கினார்.

அரிமா சங்க பொருளாளர் பரமசிவம் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ஜான்சி ராணி வரவேற்புரை ஆற்றினார். ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஆலடி எழில்வாணன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு பிரிண்டர்கள் வழங்கினார்.

இதில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆனந்த செல்வி, மேலாண்மை குழு உறுப்பினர்கள் சாக்ரடீஸ் , சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் சிவபார்வதி நாதன் நன்றி கூறினார். அரிமா சங்க உறுப்பினர்கள் ஆனந்த், சுப்புராஜ், தங்கராஜ், சினேகா பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT