பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் நந்தி சிலை அலங்கரிப்பட்டது 
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதனை போன்று புரட்டாசி மாதம் ஆறுமுகசாமி ஒடுக்க கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர்.

இதனைப்போன்று இலத்தூர், புளியரை, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதோஷ வாழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும் இதனை காண சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

SCROLL FOR NEXT