மூலனூர்:
மூலனூர், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் வி.பாலன் தெரிவித்துள்ளார்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம் வருமாறு:-
மூலனூர் துணைமின் நிலையம்:
அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை,நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதுர், கிளாங்குண்டல் மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகள்.
கன்னிவாடி துணை மின் நிலையம்:
மாலமேடு, அரிக்காரன்வலசு ஆயக்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகள்.
கொளத்துப்பாளையம் துணை மின்நிலையம்:
உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்தி நகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன் கோயில், அனுமந்தாபுரம், சின்னக்கடை வீதி மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகள் ஆகும்.