அ.திமு.க.சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சியை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்கள்

மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாநகராட்சியை கலைக்க கோரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. இதனால் மக்களுக்கு தேவை யான திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்ட தாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சியை கலைக்க கோரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா சார்பில் மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப் பட்டுள்ளது. அந்த போஸ்டரில், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே. நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என்று குறிப்பிட்டுள்ளனர்.

மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அலுவலகத்தின் அருகிலும், மாநகரத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT