சோதனை நடைபெற்ற சிவவள்ளி விலாஸ் நகை கடை. 
உள்ளூர் செய்திகள்

புதுவையில் பிரபல நகை கடையில் வருமான வரி சோதனை

புதுவையில் பிரபல நகை கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி:

புதுவை பாரதி வீதியில் சிவ வள்ளி விலாஸ் நகை கடை உள்ளது. இங்கு சென்னையில் இருந்து 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அங்கு வருமான வரி சோதனை நடத்தப்போவதாக தெரிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து நகை கடை மூடப்பட்டது. நகை கடை கணக்குகளை அதிகாரிகள் சரிபார்க்கும் பணியை தொடங்கினர். தொடர்ந்து ஆவணங்கள், நகைகளை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

புதுவையில் முக்கிய வீதியான பாரதி வீதியில் அமைந்துள்ள நகை கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT