லாஸ்பேட்டையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை பா.ஜ.க. மாநிலத் தலைவர் சாமிநாதன் வழங்கினார். 
உள்ளூர் செய்திகள்

அமைப்புசாரா தொழிளாலர்களுக்கு அடையாள அட்டை- பா.ஜ.க. மாநிலத் தலைவர் சாமிநாதன் வழங்கினார்

லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.

மாலை மலர்

புதுச்சேரி:

மத்திய அரசு மூலம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. லாஸ்பேட்டை சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை கண்டறிந்து பதிவு செய்யும் பணி நடந்தது.

உழவர்சந்தை மற்றும் குறிஞ்சி நகர் விநாயகர் கோவில் ஆகிய இடங்களில் அடையாள அட்டையை பா.ஜனதா மாநிலத்  தலைவர் சாமிநாதன் பயனாளிகளுக்கு வழங்கினார். தொகுதி தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். 

தொகுதி பொறுப்பாளர் தண்டபாணி, பொதுச்செயலாளர்கள், பாலாஜி, ரமேஷ், மாநில செயலாளர் லதா, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

ஏற்பாடுகளை தொகுதி அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பாளர் விஜய பூபதி செய்திருந்தார்.