இலவச அரிசியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

ஏழை மக்களுக்கு இலவச அரிசி- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

ரமலான் பண்டிகையையொட்டி ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச அரிசியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

புதுச்சேரி:

புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு உப்பளம் தொகுதிக்குட்பட்ட பெரிய பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏழை- எளிய மக்களுக்கு  5 கிலோ இலவச  அரிசி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு புதுவை மாநில தி.மு.க.  துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி தலைமை தாங்கினார். உப்பளம் தொகுதி தி.மு..க பிரமுகர் அஷ்ரப் முன்னிலை வகித்தார்.

இதில் ஏராளமான ஏழை எளிய மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர், பங்கு கொண்ட அனைவருக்கும் கென்னடி எம்.எல்.ஏ. பொருட்களை வழங்கி ரமலான் வாழ்த்துக்களை கூறினார்.

நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ரவி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி , மாநில இளைஞரணி  துணை அமைப்பாளர் ராஜி, அஸ்ரப், முபாரக்,நிசார், ரகீப், இமாம், காலப்பன், லாரன்ஸ், மோரீஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT