வட மாநில தொழிலாளர்களுக்கு போலீசார் இனிப்பு வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

வட மாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீசார்

குமாரபாளையம் போலீசார், இங்குள்ள சில தனியார் தொழிற்சாலை களில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களுடன் ஹோலி திருவிழா கொண்டாடி, அனைவருக்கும் இனிப்பு கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அச்சத்தை போக்கும் வகையில் அறிவுரையும் கூறினார்கள்.

குமாரபாளையம்:

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக ஏற்பட்ட வதந்தியால் பலர் அவர்களது மாநிலத்துக்கு திரும்பி செல்கின்றனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை பாதுகாக்க அரசு நடவ டிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் போலீசார், இங்குள்ள சில தனியார் தொழிற்சாலை களில் பணியாற்றி வரும் வட மாநில தொழி லாளர்களுடன் ஹோலி திருவிழா கொண்டாடி, அனைவருக்கும் இனிப்பு கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் அச்சத்தை போக்கும் வகையில் அறிவுரையும் கூறினார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் சந்தியா உள்பட போலீசார் பலர் பங்கேற்றனர்.