உயிரிழந்த அருள்தாஸ். 
உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி

திடீரென திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 55).

துணை ராணுவபடையில் போலீசாக வேலைபார்த்து ஓய்பெற்றவர்.

இவர் வீட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்குகடற்கரை சாலையில் சென்றபோது காரைநகர் பகுதியில் முன்னாள் ஸ்கூட்டியில் சென்றவர் திடீரென திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி அருள்தாஸ் பரிதாபமாக உயரிழந்தார்.

இது குறித்து கீழையூர் போல் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.