உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது

விழுப்புரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் பானாம்பட்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜாகிர் பாஷா (வயது 53) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய பகுதியான பானாம்பட்டு சாலையின் அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதாக ரகசிய தகவலில் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் படி, உதவி ஆய்வாளர் பரணிநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் பானாம்பட்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜாகிர் பாஷா (வயது 53) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாகிர்பாஷாவை சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT