உள்ளூர் செய்திகள்

மின்கட்டண உயர்வை கண்டித்து நாளை பா.ம.க. போராட்டம்-டாக்டர் அன்புமணி ராமதாஸ்

மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாட்டைக் கணக்கிட வேண்டும்மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சென்னை:

தமிழ்நாட்டில் மக்களை பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாட்டைக் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்நாளை காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது.