உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவன் சாவு

குளத்தில் நீச்சல் பழகும் போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த பார்த்தீபன். இவரது மகன் சாந்தகுமார் (வயது 18) இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் நீச்சல் கற்றுகொள்ளும் ஆர்வத்தில் குமுதேப்பள்ளி தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே உள்ள குளத்தில் நீச்சல் பழகும் போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.