சேலம்:
சேலம் டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி பள்ளிக்கு வந்த நிலையில் திடீரென வயிறு வலிப்பதாக கூறினார். இதையடுத்து ஆசிரியைகள், அவரது பெற்றோரை வரவழைத்து மாணவியை அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு அைழத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது மாணவி 6 வார கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், சேலம் நிலவாரப்பட்டி தென்றல் நகரை சேர்ந்த பிரதாப் (வயது 21) என்பவர் சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த பிரதாப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.