தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவுபடி ஆண்டிபட்டியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதி 
உள்ளூர் செய்திகள்

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள்

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் நடைபெற்றது

தேனி:

தேனி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிப்பகுதிகளில் நேற்று முதல் 3 நாட்கள் தூய்மைப்பணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்புப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்-பட்டுள்ளது.

அதன்படி, தூய்மைப் பணி முகாம்களில் வடிகால் சுத்தம் செய்யும் பணி, கழிவுகள் சுத்தம் செய்தல், கழிவறைகளை தூய்மையாக பராமரித்தல், அணைத்து நீராதாரங்கள், குடிநீர் தொட்டிகள் மற்றும் மேல் நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தப்படுத்தி குளோரினேசன் செய்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளுக்கு முகாம் நடைபெறுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் அருகிலுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சியில் பணிபுரிகின்ற தூய்மைப்பணியாளர்களை அழைத்து தூய்மைப்பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு பணிகள்  நடைபெற்று வருகிறது.

தூய்மைப்பணி மேற்கொள்ள தேவையான அனைத்து தளவாட பொருட்களை அவர்களே கொண்டு வந்து திரும்ப கொண்டு செல்வதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவு-ரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் வீசி எரியப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் கவர்கள் உள்ளிட்டவை அப்புறப்படுத்திடவும், ஒவ்வொரு கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு உரிய அபராத தொகை விதித்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, தேனி மாவட்டத்தினை சுத்தமான, சுகாதாரமான மாவட்டமாக உருவாக்கிட தங்களது பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப்பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும் என மாவட்ட  கலெக்டர் முரளிதரன்  தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT