உள்ளூர் செய்திகள்

பாப்பாக்குடி அருகே வாழைத்தோட்டத்தில் குழாய்கள் திருட்டு

கண்ணம்மாள் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

நெல்லை:

பாப்பாக்குடி அருகே கபாலிபாறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ப வரது மனைவி கண்ணம்மாள் (வயது 43). இவர் அதே பகுதியில் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 10 குழாய்களை தோட்டத்தில் வைத்து இருந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை அவர் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT