தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு 
உள்ளூர் செய்திகள்

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை:


சென்னையில் தி.நகர் பகுதியில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த  துணை ஆணையர் தலைமையில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

முன்னதாக பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை அடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படியுங்கள்...ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன: ஐ.நா.எச்சரிக்கை

SCROLL FOR NEXT