பெட்டியில் மனுக்களை அளித்த பொதுமக்கள் 
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் இன்று புகாரளிக்க வந்த மக்கள் பெட்டிகளில் மனு அளித்து சென்றனர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் விதமாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறு அறிவிப்பு வரும்வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அங்கிருந்த புகார் பெட்டியில் அளித்துச் சென்றனர்.