உள்ளூர் செய்திகள்

ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்தல்

பரமத்தி வட்டாரத்தில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் மேலப்பட்டி கிராமத்தில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்தல் நிகழ்ச்சி செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. விவசாயிகள், மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் மேலப்பட்டி கிராமத்தில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்தல் நிகழ்ச்சி செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், பரமத்தி வட்டார அட்மா திட்ட தலைவர் தனராசு , மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி மற்றும் திரளான விவசாயிகள், மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT