விழாவையொட்டி கொடுமுடியில் இருந்து ஸ்ரீ மாகாளியம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்ட காட்சி.  
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வீரபாண்டி ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில் பெருஞ்சலங்கை ஆட்டம்

ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு கொண்டு செல்லுதல் நடக்கிறது.ஈசன் சலங்கை ஆட்டக்குழுவினரின் பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது.

வீரபாண்டி : 

திருப்பூர் வீரபாண்டி ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. வருகிற 12-ந்தேதி வரை விழா நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 3மணிக்கு அம்மை அழைத்தல் நடைபெற்றது. மாலை 4மணிக்கு ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு கொண்டு செல்லுதல் நடக்கிறது.

நாளை 11-ந்தேதி காலை 6மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லுதல், காலை 9மணிக்கு ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் , 10மணிக்கு ஸ்ரீசவுடேஸ்வர் அம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு பரிவட்டம் கொண்டு செல்லுதல், பகல் 1மணிக்கு ஸ்ரீமாகாளியம்மனுக்கு பெரிய பூஜை, 3மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு மாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லுதல், இரவு 11மணிக்கு கும்பம் கங்கையில் விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

12-ந்தேதி காலை 6மணி முதல் பகல் 2மணி வரை மஞ்சள் நீராடுதல், பகல் 11மணிக்கு மாகாளியம்மன் திருவீதி உலா நடக்கிறது. நேற்று மாலை திருப்பூர் பவளகொடி கும்மியாட்டம் நடைபெற்றது. இன்று 10-ந்தேதி இரவு 8மணிக்கு கொங்கு பண்பாட்டுமையம் ஈசன் சலங்கை ஆட்டக்குழுவினரின் பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது.