உள்ளூர் செய்திகள்

அய்யப்ப சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

அய்யப்ப சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.மகா உற்சவ விழாவையொட்டி நடந்தது

பெரம்பலூர்

பெரம்பலூரில் தெப்பக்குளம் கிழக்கு கரையில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் 56-ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகா உற்சவ விழாவையொட்டி நேற்று காலையில் கோவிலில் மூலவர் அய்யப்ப சுவாமிக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் உற்சவர் அய்யப்ப சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இரவு 7 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் தெப்பக்குளத்தில் உற்சவர் அய்யப்ப சுவாமி எழுதருளிய தெப்பம் சுற்றி வந்தது. தெப்பக்குளத்தை சுற்றி நின்ற பக்தர்கள் 'சாமியே சரணம் அய்யப்பா' என்ற பக்தி கோஷத்தை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். குளத்தில் தெப்பம் வலம் வந்தபோது பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புக்காக குளத்தை சுற்றி வந்தனர்.

SCROLL FOR NEXT