உள்ளூர் செய்திகள்

புதிய கூட்டுறவு சங்கம் தொடக்கம்

பெரம்பலூர் தேவையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தொடக்கம் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர்,

பிஆர் 10 மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பிரித்து, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தேவையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். அப்போது அவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மா.பிரபாகரன், மாவட்ட கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் செயலாட்சியருமான அரசு , பெரம்பலூர் சரக துணை பதிவாளர் அ. இளஞ்செல்வி பெரம்பலூர் நகர மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஒன்றிய குழு தலைவர் வேப்பந்தட்டை க. ராமலிங்கம் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கடன் மேலாவிற்கான விண்ணப்பத்தை வழங்கினார்கள், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கூட்டுறவு சங்கம் தலைவர் கருணாநிதி செய்து இருந்தார்.

SCROLL FOR NEXT