உள்ளூர் செய்திகள்

அகரம்சீகூர் அருகே அபராதரட்சகர் கோவிலில் கொடியேற்றம்

அகரம்சீகூர் அருகே அபராதரட்சகர் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் யாக பூஜையும், கணபதி பூஜையும், கடம் புறப்பாடும், அபிஷேகமும் நடைபெற்றது.

மாலை மலர்

அகரம்சீகூர்:

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து சு.ஆடுதுறை கிராமத்தில் அபராதரட்சகர் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அறங்காவலர் துறை பெரம்பலூர் மாவட்ட தலைவர் கலியபெருமாள் துவக்கி வைத்தார். இதையொட்டி விக்னேஷ்வரர் பூஜையும், கலச பூஜையும், யாகமும், கொடி படத்திற்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் யாக பூஜையும், கணபதி பூஜையும், கடம் புறப்பாடும், அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கருணாகரன், கோவில் அர்ச்சகர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.