உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் காவல்துறையில் பணிபுரிய 11 பேருக்கு பணி நியமன ஆணை

பெரம்பலூர் காவல்துறையில் பணிபுரிய 11 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டதுமாவட்ட எஸ்.பி. ஷ்யாமளாதேவி வழங்கினார்

மாலை மலர்

பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திற்கான எழுத்து தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் மருத்துவ சோதனைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை முடித்து தகுதியுள்ள நபர்களை தமிழக காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 11 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தகுதி பெற்ற 11 நபர்களில் 3 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கும், பெரம்பலூர் எஸ்.பி. ஷ்யாமளாதேவி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்களி 9 பேர் மாவட்ட சேமநலப்படை, 2 பேர் தமிழக சிறப்பு காவல்படையில் பணிபுரிவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.